
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று திங்கட்கிழமை காலை தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 398,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 366,200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,775 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
