இலங்கையில் இன்று தங்கத்தின் விலை பாரிய அதிகரிப்பு!

இலங்கையில் இன்று வியாழக்கிழமை தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று ஒரு பவுண் தங்கத்தின் விலை 7000 ரூபாயினால் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உள்நாட்டு சந்தையில் நிலவும் கேள்விக்கு ஏற்ப இந்த விலை மாற்றம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 403,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,350ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.