இலங்கையில் இன்று தங்கத்தின் விலை அதிகரிப்பு
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று புதன்கிழமை திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாய் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,325 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
