இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி!
உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் (பெப்ரவரி 14) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 395,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று அதன் விலையில் 3,000 ரூபாய் குறைவடைந்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,688 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
