இலங்கையில் இன்று தங்கத்தின் விலை
இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தை மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு அமைவாக, இன்று புதன்கிழமை தங்கத்தின் விலையில் அதிகரிப்போ அல்லது குறைவோ ஏற்படாது ஸ்திரமான நிலையில் காணப்படுவதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,675 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு அமைவாகவே இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
