
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!
தங்கத்தின் விலையில் இன்று சனிக்கிழமை எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த சில வாரங்களாக தங்கவிலை அதிகரித்து வந்தநிலையில் இந்த வாரம் தங்கவிலை வேகமாக சரிந்து வருகிறது.
அதன்படி இன்றையதினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 325,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 300,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 40,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 37,575 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
