இலங்கையில் பரவும் ஆபத்தான வைரஸ்: எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் “டெங்கு 3” வைரஸ் பரவி வருவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளின் படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெங்கு 3 க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியோ, ஆன்டிபற்றீரியாக்களோ இல்லை எனவும் இரு தினங்களுக்கு மேல் ஒருவருக்கு காய்ச்சல் காணப்படுமாயின், டெங்கு பரிசோதனை நடத்துவதன் ஊடாக அதனை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்