இலங்கையில் அதிகரிக்கும் எச்.ஐ.வீ எயிட்ஸ் தொற்றாளர்கள்

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 20 எச்.ஐ.வீ தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர், இதில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் 20 முதல் 49 வயது வரையிலானவர்கள், என தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 439 எயிட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

கடந்த காலங்களை விடவும் இளம் வயதினர் எயிட்ஸ் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளது.

இது ஓர் ஆபத்தான நிலை எனவும், கூடுதல் எண்ணிக்கையிலான தொற்றாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும், அறிமுகம் இல்லாதவர்களுடன் பாலுறவு கொள்ளும் போது பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது, எனவும் அவர் தெரிவித்துள்ளார்.