
இலங்கையிலிருந்து தங்கம் கடத்த முயன்ற ஐவர் விமான நிலையத்தில் கைது!
இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்திச் செல்ல முயற்சித்த ஐந்து சந்தேகநபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 8.65 கிலோ தங்கத்துடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தங்கத்தை ஜெல் மற்றும் தூசி வடிவில் கடத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொதியின் பெறுமதி சுமார் 164 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
