
இலங்கையின் மலைப்பாங்கான பகுதிகளுக்குக் உதவும் இந்தியா
டிட்வா சூறாவளியால் நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட பாலங்களை புனரமைப்பதற்காக, மேலும் 15 பெய்லி பாலங்களை இந்தியா வழங்கவுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இதனை தெரிவித்துள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பெய்லி பாலம் பாதிக்கப்பட்ட மற்றும் மலைப்பாங்கான பகுதிகளுக்கான போக்குவரத்தை இலகுப்படுத்த உதவுகிறது.
அதற்கமைய, கண்டி மற்றும் ராகலை பகுதிகளுக்கு இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட பெய்லி பாலத்தை போன்றே மற்றுமொரு பாலம் விரைவில் திறக்கப்படவுள்ளது.
