இலங்கையின் புதிய முற்போக்கான செயற்திட்டத்துக்கு முழு ஆதரவு வழங்குவதாக ஐ.நா. உறுதி
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயோர்க்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) ஆகியோருக்கு இடையில் நேற்று(25) சந்திப்பு இடம்பெற்றுள்ளது .
நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்த செயல்முறையின் முன்னேற்றம், இலங்கையை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் புதிய தளத்துக்கு உயர்த்துவதற்காக அரசாங்கம் தற்போது செயற்படுத்தி வரும் செயல்திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி ஐ.நா. பொதுச்செயலாளரிடம் விளக்கியுள்ளார் .
இலங்கை அரசாங்கத்தின் புதிய முற்போக்கான செயற்திட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை முன்னிற்பதாகவும், முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும் ஐ.நா. பொதுச்செயலாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார் .
