இலங்கையின் அனர்த்த நிவாரண நிதிக்காக ‘GovPay’ மூலம் நன்கொடை அளிக்கும் முறை அறிமுகம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், ‘GovPay’ டிஜிட்டல் கட்டண முறையின் ஊடாக நன்கொடைகளைச் செலுத்தும் வசதியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நிதி அமைச்சினால் நிறுவப்பட்ட அனர்த்த நிவாரண நிதிக்காக (Disaster Relief Fund) நன்கொடைகளை வழங்கும் வகையில், இது வெளிப்படையான முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ‘GovPay’ மூலம், எவரும் எந்த நேரத்திலும் உடனடியாக நன்கொடைகளை செலுத்த முடியும்.

நன்கொடை அளிக்கும் நிதியானது, அந்த நிதிக்கணக்கில் உண்மையான நேரத்தில் (real-time) வரவு வைக்கப்படுகிறது.

இதன்மூலம், வீட்டிலிருந்தபடியே அல்லது வேறு எங்கிருந்தும் இலகுவாகப் பங்களிப்பை வழங்க முடியும்.

அனர்த்த நிவாரண நிதிக்கு நன்கொடைகளை, ‘GovPay’ உடன் இணைக்கப்பட்ட வணிக வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட FinTech செயலிகள் (applications) மூலம் செலுத்தலாம்.

நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய வங்கிகள் மற்றும் FinTech செயலிகளின் விபரங்களுக்கு https://govpay.lk/si/supported-banks-fintech என்ற இணையதளத்திற்குச் செல்லலாம்.