இலங்கையர் துபாயில் கைது

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குழுவுடன் தொடர்புடையவர் என கருதப்படும் இலங்கை பிரஜை ஒருவர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபரது சொகுசு வீட்டை துபாய் ரகசிய பொலிஸ் அதிகாரிகள் குழு சோதனை செய்த போது வீட்டில் இருந்து பல்வேறு போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், துபாய் பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டடுள்ளார்.

மேலும் குறித்த நபர் தற்போது பிரான்ஸ் சிறையில் உள்ள குடு அஞ்சு என்றழைக்கப்படும் சிங்கராகே அமல் சில்வாவின் போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவன் என பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகள் துபாய் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.