இலங்கையர்களால் இந்தியர்கள் அதிகம் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

இலங்கையர்களால் இந்தியர்கள் அதிகம் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

வெளிநாடுகளில் இந்திய நாட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ள போதிலும், இலங்கையில் அதிகரித்தே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

இதன்படி, 2025ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்திய நாட்டவர்கள் மீதான தாக்குதல் 50 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், 2023 ஆம் ஆண்டில், குறித்த எண்ணிக்கை 109 ஆகக் காணப்பட்ட நிலையில், 2024 ஆம் ஆண்டு 107 ஆகக் குறைவடைந்துள்ளது.

கடந்து ஆண்டில், இலங்கை, அமெரிக்கா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், பிரித்தானியா.

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலேயே, இந்திய நாட்டவர்கள் அதிகளவில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன்படி, இலங்கையில், கடந்த 2022ஆம் ஆண்டு 14 தாக்குதல் சம்பவங்களும், 2023 ஆம் ஆண்டு 30 தாக்குதல் சம்பவங்களும், 2024 ஆம் ஆண்டு 13 தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.