
இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர்களை அவசரகால நிவாரணமாக வழங்கும் ஜப்பான்
ஜப்பானிய அரசாங்கம் 1.5 மில்லியன் டொலர்களை அவசரகால நிவாரணமாக இலங்கைக்கு வழங்கவுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர் அவசர நிதியம் (UNICEF) மூலம் இந்நிதியை ஜப்பான் இலங்கைக்கு வழங்கவுள்ளது.
மேலும், 1.5 மில்லியன் டொலர் பங்களிப்பானது 53,000 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 122,000 உடனடித் தேவையுள்ள குழந்தைகள் உட்பட 1.2 மில்லியன் மக்களுக்கு மருந்துகளை வாங்குவதற்கு UNICEF இந்த அவசர நிதியை வழங்கியுள்ளது.
