
இலங்கைக்கு வர 39 நாடுகளின் பிரஜைகளுக்கு இலவச விசா!
தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு கட்டணமின்றி (இலவசமாக) சுற்றுலா விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
06 மாத காலத்திற்கு இலவசசுற்றுலா விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, இலவச சுற்றுலா விசாக்களை வழங்குவதற்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட வரைவை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான அனுமதி கோரி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யொசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலியா
ஆஸ்திரியா
பஹ்ரைன்
பெலாரஸ்
பெல்ஜியம்
கனடா
சீனா
செக் குடியரசு
டென்மார்க்
பின்லாந்து
பிரான்ஸ்
ஜேர்மனி
இந்தியா
இந்தோனேசியா
ஈரான்
இஸ்ரேல்
இத்தாலி
ஜப்பான்
கசக்ஸ்தான்
குவைத்
மலேசியா
நேபாளம்
நெதர்லாந்து
நியூசிலாந்து
நோர்வே
ஓமான்
பாகிஸ்தான்
போலந்து
கத்தார்
ரஷ்யா
சவூதி அரேபியா
தென் கொரியா
ஸ்பெயின்
ஸ்வீடன்
சுவிட்சர்லாந்து
தாய்லாந்து
துருக்கி
ஐக்கிய அரபு இராச்சியம் (UAE)
பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
