இலங்கைக்கு வரவுள்ள இந்திய பிரபலங்கள்!
இலங்கையில் இடம்பெறவுள்ள தனியார் நிகழ்வொன்றில் கலந்துகொள்ள இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகத்திய அகாடமி விருது பெற்றவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி தரூர், மத்திய பெண்கள், சிறுவர்கள் மேம்பாடு மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன், பொலிவுட் திரை நட்சத்திரங்களான, அக்ஷய் குமார் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒகஸ்ட் 15 முதல் 17 வரை கொழும்பில் நடைபெறவிருக்கும், Jain International Business Conclave 2025 தனியார் நிகழ்வொன்றிலேயே இவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
