கொழும்பு துறைமுகத்தின் டொல்பின் இறங்குதுறைக்கு (Dolphin Jetty) 36,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் ஹரி ஆனந்த் (HARI ANAND) என்ற இந்திய கப்பல் வந்தடைந்துள்ளது.

இக்கப்பல் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இக்கப்பலில் மொத்தம் 36,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதில் 18,000 மெட்ரிக் தொன் டீசல் 18,000 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோல் அடங்கும்.

கப்பல் வந்தடைந்தவுடன், அதிலுள்ள எரிபொருளை கொலன்னாவை எரிபொருள் களஞ்சியத்திற்கு அனுப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக துறைமுக அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகளை நிவர்த்தி செய்ய, இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த எரிபொருள் தொகுதி கொண்டு வரப்பட்டுள்ளது.
இது சில நாட்களுக்குள் இந்தியாவில் இருந்து வந்த இரண்டாவது எரிபொருள் கப்பலாகும்.
