
இலங்கைக்கு பிரித்தானியா நிதி உதவி
8.9 லட்சம் டொலர் அவசர உதவியை அறிவித்தது ஐக்கிய இராச்சியம் சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து இலங்கை மீண்டு வரத் தொடங்கியுள்ள நிலையில், பிரித்தானியா (UK) 890,000 அமெரிக்க டொலர் அவசர மனிதாபிமான உதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இந்த உதவி, செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross), இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை (UN) ஆகியோருடன் இணைந்து வழங்கப்படும்.
புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசரப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் பராமரிப்பை வழங்குவதே இந்த உதவியின் நோக்கமாகும்.
இடம்பெயர்ந்த அல்லது கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
