
இலங்கைக்கு சுற்றுலா வந்தவர் மரணம்
-திருகோணமலை நிருபர்-
பிரான்ஸ் நாட்டில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்த நபர் இன்று திங்கட்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கடந்த 18ஆம் திகதி 44 பேருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்தவர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மைக்கல் மார்சல் (வயது – 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மனைவி உட்பட 44 பேருடன் சுற்றுலா வந்ததாகவும் நேற்று இரவு திருகோணமலை – அலஸ் தோட்டம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்த போது சுகவீனமுற்றதாகவும் இதனை அடுத்து 1990 அவசர அம்பியூலஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிய வருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பிலான விசாரணைகளை உப்பு வெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
