இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து
இங்கிலாந்து அணி எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த தொடரில் இரு அணிகளும் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் மோதவுள்ளன.
இதற்கமைய ஒருநாள் போட்டிகள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்திலும், டி20 போட்டிகள் கண்டி பல்லேகல மைதானத்திலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.