
இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலை பண்டல்கள் மீட்பு
-மன்னார் நிருபர்-
இந்நிலையில் பாம்பன் அடுத்த அக்காள் மடம் வடக்கு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த பீடி இலை பண்டல்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்திய மதிப்பில் 5 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 780 கிலோ பீடி இலை பண்டல்களே இதன் போது மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் நாட்டுப் படகை பாம்பன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் கடத்தலில் ஈடுபட்ட தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
