இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

முத்தரப்பு இருபதுக்கு 20 தொடரின் இன்றைய (22) இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் – ராவல்பிண்டியில் போட்டி இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஜனித் லியனகே ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும், குசல் பெரேரா 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் மொஹமட் நவாஸ் 4 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

129 என்ற வெற்றியிலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி பதிலுக்கு துடுப்பாடியது. 15.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றியிலக்கை அடைந்தது.