
இலங்கைக்கு உலக வங்கி 120 மில்லியன் டொலர் அவசர நிதி உதவி!
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவை அடுத்து, இலங்கையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பை மீட்டெடுக்க 120 மில்லியன் அமெரிக்க டொலர் வரை அவசர ஆதரவை வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
தற்போதுள்ள திட்டங்களில் இருந்து நிதியைத் திருப்பிவிடுவதன் மூலம், சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரம், நீர், கல்வி, விவசாயம் உட்பட அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.
உலக வங்கியின் தனியார் துறைப் பிரிவான சர்வதேச நிதி நிறுவனம் (IFC), வேலைகளை உருவாக்கவும் பொருளாதார மீட்சியை இயக்கவும், விவசாயம், உற்பத்தி மற்றும் தளவாடங்கள் போன்ற முக்கிய துறைகளில் மூலோபாய முதலீடுகள் மற்றும் ஆலோசனை ஆதரவை வழங்கும்.
அத்துடன் பரந்த மீட்சித் திட்டங்கள் மற்றும் புதிய ரி பில்டிங் ஸ்ரீ லங்கா (“Rebuilding Sri Lanka”) நிதியத்தை உருவாக்குவதில் அரசாங்கத்துடன் நெருக்கமாகப் பணியாற்றுவதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
