
இலங்கைக்கு உதவுவதில் சீனாவை பின்தள்ளிய இந்தியா
இந்த வருடம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான 4 மாத காலப்பகுதியில், இலங்கைக்கு அதிகளவு கடனுதவி வழங்கிய நாடாக சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியா இலங்கைக்கு 376.9 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்கியுள்ளதுடன், சீனா 67.9 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்திய கடன் வசதி சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இலங்கையில் கடுமையான வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு ஏற்பட்டபோதும், மார்ச் மாதத்தில் முற்றிலுமாக சரிவை எட்டியபோதும் சீனாவை முந்திக் கொண்டு இந்தியா இலங்கைக்கு கடனை வழங்கியது.
ஏப்ரல் 30 வரையிலான நான்கு மாதங்களில் நிதி வழங்கல் குறித்த தரவுகளின் அடிப்படையில் சீனாவால் நீடிக்கப்பட்ட 67.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது 376.9 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன்களை நீடித்து இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
