இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா சேவ்வந்தி உட்பட 6 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த சந்தேகநபர்கள் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.