இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவுவதற்குத் தயார் என சீனா உறுதி!

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவுவதற்குத் தயார் என சீனா உறுதியளித்துள்ளது.

மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய, பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசின் பிரதமர் லீ கியாங் வை சந்தித்துக் கலந்துரையாடிய போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் நிதித் துறைகளில் பல்வகைப்பட்ட ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாகப் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீனாவின் ‘ஒரு சீனா கொள்கைக்கு’ ஒத்துழைப்பை வழங்குவதாகவும், ஸிஸாங் மற்றும் சின்ஜியாங் தொடர்பான விவகாரங்களில் சீனாவுக்குத் திடமான ஆதரவை இலங்கை வழங்குவதாகவும் பிரதமர் மீண்டும் உறுதியளித்துள்ளார்