
இலங்கைக்கான ஈரானிய தூதுவர் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு
இலங்கைக்கான ஈரானிய தூதுவர் ஹஷேம் அஷ் ஜசாதே, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை சந்தித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொருளாதார வீழ்ச்சியை குறைத்து ஸ்திரத்தன்மையை அடைய இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஈரான் குடியரசின் ஆதரவு தொடர்ச்சியாக வழங்கப்படும் என ஈரான் தூதுவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
