
இலக்கை எட்டிய சுங்கம்!
இலங்கை சுங்கத்தினால் இந்த ஆண்டுக்குள் ஈட்டவேண்டிய வருவாய் இலக்கை நேற்றைய தினத்துடன், (செவ்வாய்கிழமை ) கடந்துள்ளதாக அறிவித்துள்ளது
சுங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஆம் ஆண்டுக்கான வருவாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 2,115 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக நேற்றைய தினம் வரை 2,117.2 பில்லியன் ரூபாய் என்ற எல்லையை எட்ட முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
