
இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்க மகளிர் அணி
மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்க மகளிர் அணி தகுதிபெற்றுள்ளது.
இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 319 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதற்கமைய 320 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இந்தநிலையில் தென்னாப்பிரிக்க அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
