இறால் வளப்பு திட்டத்தை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

-கிரான் நிருபர்-

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருமலை வீதியில் வட்டவானில் பாரியளவிலான இறால் வளர்ப்பு திட்டம் மேற்கொள்ளப்படுவதனால் அப்பகுதி நன்னீர் மீன்பிடிப்போரும் அன்றாடம் ஜீவனோபாய தொழிலை மேற்கொள்ளும் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் நேற்று வியாழக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டமும் பேரணியும் இடம்பெற்றது.

குறித்த பேரணி காயன்கேனி பழைய பாலத்திலிருந்து ஆரம்பமாகி திருமலை வீதி ஊடாக சென்று வட்டவான் இறால் பண்ணைக்கு சென்று பண்ணை முன் பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பினார்கள்.

மாங்கேணி, காயன்கேணி, வட்டவான் மற்றும் ஆலங்குளம் இறாலோடை போன்ற மீனவ அமைப்புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் மக்கள் ‘அசுத்தப்படுத்தாதே வாவி நீரை அசுத்தப்படுத்தாதே’, ‘அழிக்காதே அழிக்காதே மீன் வளத்தை அழிக்காதே’,  ‘சுத்தமான காற்றை சுவாசிக்க விடு’, ‘மீனவரின் வாழ்வாதாரத்தை அழிக்காதே ‘ போன்ற கோசங்களை எழுப்பியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

வட்டவான் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணையினால் குறித்த வாவி அசுத்தமடைந்து வருவதாகவும், குறித்த இறால் பண்ணையில் இருந்து திறந்து விடப்படும் நீரினால் ஆற்றில் மீன்கள் இறந்து காணப்படுவதுடன் இதனால் மீன் இறால் வளங்கள் அழிந்து கொண்டு போவதினால் தங்கள் பொருளாதார ரீதியில் பின்நோக்கி போவதாகவும் கூறிப்பிட்டனர்.

தாங்கள் யாரிடம் முறையிடுவது என்றும் தெரியாமல் உள்ளதாகவும் இதனை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இதனை கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும்,இப் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இங்கு கோரிக்கை விடுத்தனர். அத்துடன் கடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் இவ்விடயம் பற்றி கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்ட காரர்கள் கருத்துக்களை தெரிவித்து கலைந்து சென்றார்கள்.

இறால் வளப்பு திட்டத்தை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

இறால் வளப்பு திட்டத்தை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

இறால் வளப்பு திட்டத்தை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்