இறப்பர் செய்கைக்கான உர மூட்டையின் விலை குறைப்பு

இறப்பர் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் உர மூட்டையின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி 50 கிலோகிராம் உர மூட்டையின் விலையை 9,500 ரூபாயிலிருந்து 5,500 ரூபாவாக குறைக்க அரச உர நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேராவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் பல வருடங்களாக இறப்பர் செய்கைக்கு உரம் இடப்படவில்லை என இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, வருடாந்த மரப்பலகை விளைச்சல் 100,000 மெட்ரிக் தொன்னிலிருந்து 65,000 மெட்ரிக் தொன்னாகக் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இறப்பர் பயிர்ச்செய்கைக்கான உர மானியத்தை இந்த வாரத்தில் இருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்