இறந்த மீன்கள், விலங்குகளைக் கையாள்வதில் கவனம்! – WHO எச்சரிக்கை!

 

நாட்டின் அண்மைய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, இறந்த விலங்குகளைப் பாதுகாப்பாக நிர்வகிப்பது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையில் பொதுச் சுகாதார வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

வெள்ளம் போன்ற அனர்த்தங்களின் போது, பெரும்பாலும் நீரில் மூழ்குதல், நோய் அல்லது காயம் காரணமாக விலங்குகள் உயிரிழக்கின்றன.

இவற்றை சரியாகக் கையாளாவிட்டால் அவை சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்துகிறது.

வெள்ளத்திற்குப் பிறகு மீன்களைத் தொடுவதோ, சேகரிப்பதோ அல்லது உட்கொள்வதோ கூடாது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

அத்துடன், இறந்த எந்தவொரு விலங்கையும் அகற்றுவதற்கு முன்னர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHIs) அல்லது உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பெறுமாறும் கோரப்பட்டுள்ளது.