
இறந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு
வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் இறந்த நிலையில் யானை இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளனர்.
ஹொரவப்பொத்தானை காட்டுப் பகுதியில் இருந்து வீதி நோக்கி வந்த யானையே வீதி ஓரத்தில் இறந்து கிடந்த நிலையில், வீதியில் சென்றவர்கள் குறித்த யானை இறந்து இருப்பதை அவதானித்ததையடுத்து பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த யானை இறந்தமைக்கான காரணம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
