இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

-அம்பாறை நிருபர்-

அம்பாறை, மருதமுனை – பாண்டிருப்பு இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்களே இன்று திங்கட்கிழமை காலை உயிரிழந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளனர்.

இவ்வாறு கரையொதுங்கியுள்ள இரண்டு கடலாமைகளும் 3 அடி நீளமும் 25 தொடக்கம் 50 கிலோ கிராம் எடை கொண்டதாகும்.

ஆழ் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடலாமைகள் கரையொதுங்கி வருவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கடலாமைகள் இரண்டும் ஒலிவ் வகையைச் சார்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இம்மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் அண்மையில் கடலாமைகள் டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியிருந்தமை   குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்