இறக்குமதி தகராறில் துறைமுகங்களில் 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கியுள்ளன
புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் தேங்கி நிற்கின்றன, இதனால் கூடுதலான சரக்குகளை இறக்குவதில் கடுமையான தளவாட சவால்கள் ஏற்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த புதிய வாகனங்களை ஏற்றிச் வந்த கப்பல், நிலுவையில் உள்ளதால் ஏற்பட்ட இடப் பற்றாக்குறை காரணமாக பல நாட்கள் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சுங்க வட்டாரங்களின்படி, மூன்றாம் தரப்பு நாடுகள் மூலம் வழங்;கப்பட்ட வங்கி கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட ஜப்பானிய வாகனங்கள் விடுவிக்கப்படாததால், இவற்றில் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. மே 27 அன்று எழுந்த இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.
இந்த வாகனங்களுக்கான தாமதக் கட்டணங்கள் இப்போது நீடிக்க முடியாத அளவை எட்டியுள்ளதாகவும் சுங்க வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு வாகனத்திற்கு, கட்டணங்கள் ரூ. 500,000 வரை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கை இன்று நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
திரட்டப்பட்ட தாமதக் கட்டணங்கள் மொத்த இறக்குமதி செலவுகளுடன் சேர்க்கப்படும் என்று வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கின்றனர், இது வாகனங்கள் வெளியிடப்பட்டவுடன் உள்ளூர் சந்தையில் வாகன விலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.