இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான விசேட பண்ட வரி நீடிப்பு!

இறக்குமதி செய்யப்படும் சீனி கிலோவொன்றுக்கான 50 ரூபாய் என்ற விசேட பண்ட வரி விதிப்பு அரசாங்கத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த வரி விதிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வருடம் ஒன்றிக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி கடந்த முதலாம் திகதியுடன் நிறைவடையவிருந்தது.

இந்தநிலையில், அந்த வரி விதிப்பு நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்