இறக்குமதி செய்யப்படும் சகல மதுபானங்களின் விலைகளும் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் சகல மதுபானங்களின் விலைகளும் இன்று வியாழக்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, வைன், விஸ்கி, ரம், ஜின், வொட்கா ஆகிய இறக்குமதி மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வற் வரி அதிகரிப்பு காரணமாக நேற்று முதல் அமுலாகும் வகையில் உள்ளூர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பியர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.