இரு வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது

இரு வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டத்தின் அதிரடி முடிவால் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாற்று பகுதியில் இருந்து அனுமதி பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றி பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களும் அதன் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சுண்டி குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் 11 முதிரை மரக் குட்டிகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணை பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி மீட்கப்பட்ட பொருட்கள் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படு;த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தருமபுர பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி டி. எம் .சதுரங்க தெரிவித்துள்ளார்.