இரு வெவ்வேறு இடங்களில் கசிப்பு மற்றும் கோடாவுடன் இருவர் கைது!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் வாதரவத்தை பகுதியில் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு 360 லீற்றர் கோடாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரவாணி சந்தி பகுதியில் 4 1/2 லீற்றர் கசிப்புடன் 37 வயதுடைய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கசிப்பினை எடுத்துச் செல்லும் போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு கைது நடவடிக்கைகளும் காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர்கள் இருவரும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்.
அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்