இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி

மாத்தளை – மஹாவெல பொலிஸ் பிரிவின் பல்லேபொல-மடவல வீதியில் உள்ள நாரங்கமுவ பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று , எதிர்த் திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

பல்லேபொலவிலிருந்து மடவல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள் சாரதிகளும் மாத்தளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் நாலந்தாவைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் மாத்தளை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மஹாவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.