இரு மோட்டர் சைக்கிள்கள் திருட்டு: மல்லாவி இளைஞன் கைது

-வவுனியா நிருபர்-

வவுனியாவில் இரு மோட்டர் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மல்லாவி இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இதன் போது மல்லாவியைச் சேர்ந்த 27 வயது இளைஞன் ஒருவனை சந்தேகத்தில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கடந்த செவ்வாய்கிழமை வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை காணவில்லை என அதன் உரிமையாளர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனடிப்படையில் சந்ததேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில் திருடப்பட்ட மோட்டர் சைக்கிள் மீட்கப்பட்டது.

தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது கடந்த யூன் மாதம் 29 ஆம் திகதி வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகில் விடப்பட்ட நிலையில் காணமல்போன மோட்டர் சைக்கிளும் மல்லாவியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இரு மோட்டர் சைக்கிள்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்