இரு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் மாயம்

அளுத்கம பெந்தர ஆற்றில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இரண்டு சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அளுத்கமவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணி முடிந்து ஆட்களை ஏற்றிச் சென்ற படகும் பெந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலாப் படகுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் பெந்தர சுற்றுலா விடுதியொன்றில் இருந்த இருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அளுத்கம மற்றும் பெந்தர பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்