இரு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது
-பதுளை நிருபர்-
படல்கும்பர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்ல கெடவில படல்கும்பர பகுதியில் உள்ள வீடொன்றில் சட்ட விரோதமான முறையில் இரு துப்பாக்கிளை வைத்திருந்த ஒருவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசறை ஆக்கரத்தன்ன விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து எல்ல-கெடவில படல்கும்பர பகுதிக்கு விரைந்த விஷேட அதிரடி படையினர் வீடொன்றில் கட்டிலுக்கு கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் சொட்கன் இதற்கு பயன்படுத்தப்படும் ஒரு தோட்டாவும், 6 வெற்று தோட்டாக்களும் மேலும் 16 போலை குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதோடு 50 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிகளையும் சந்தேக நபர்களையும் படல்கும்பர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததோடு குறித்த சந்தேக நபர் மீது வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக விசாரணைகளை படல்கும்பர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.