இரு தினங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள பிணைமுறி தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே குறித்த குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளை இவர்கள் சந்திக்கவுள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.