இரு குழுக்களுக்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி தெல்கொடை பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் கலவானை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிகிச்சை பெற்று வந்த இருவரை பார்வையிடுவற்காக சென்ற சிலருக்கிடையில் வைத்தியசாலைக்கு முன்பாக மீண்டும் மோதல் வலுப்பெற்றுள்ளது. இதன்போது கத்தியால் குத்தி ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தெல்கொடை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 39 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு சந்தேகநபரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்