
இரு குழுக்களிடையே தகராறு : கத்திக்குத்தில் ஒருவர் பலி!
கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இருவர் காயமடைந்த நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரு குழுக்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
