இருவரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த யானை பிடிபட்டது!

சீகிரியா பகுதியில், பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி வந்த காட்டு யானை  ஒன்றரை நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இன்று புதன்கிழமை பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

35 வயது மதிக்கத்தக்க குறித்த காட்டு யானை  வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால்  மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து  குறித்த காட்டு யானை  ஹொரவ்பொத்தானை காட்டு யானைகள் மத்திய நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

அண்மையில் குறித்த காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான இருவர் உயிரிழந்தமையை தொடர்ந்து  அதனை பிடித்துச் செல்லுமாறு பிரதேசவாசிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய  வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.