இராணுவ பேருந்து மோதி 3 வயது சிறுமி பலி!
பண்டாரகம பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இரணுவத்தினர் பயணித்த பேருந்தில் ஸ்கூட்டர் ஒன்று மோதியதில் ஸ்கூட்டரில் பயணித்த 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரைகம கலகட வீதி பகுதியைச் சேர்ந்த இசதி தெனெத்மா சபுகே (வயது – 3) என்ற சிறுமியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பண்டாரகம கூட்டுறவுச் சங்கத்தின் பிரதான காரியாலயத்தின் கணக்காளரான உயிரிழந்த சிறுமியின் தாயார், சிறுமியும் ஸ்கூட்டரில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது, களுத்துறையில் இருந்து இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் பண்டாரகமவில் இருந்து கெஸ்பேவ நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே பண்டாரகம கூட்டுறவுச் சங்க அலுவலகத்திற்கு முன்பாக விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த சிறுமியையும் அவரது தாயையும் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் எனினும் சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்