இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது மடகாஸ்கர்

இராணுவ கட்டுப்பாட்டுக்குள் மடகாஸ்கர் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

மடகாஸ்கர் இராணுவம், நாட்டின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

பொது ஒழுங்கை மீட்டெடுப்பதையும் குடிமக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் அந்நாட்டு ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா இந்த நடவடிக்கையை அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான சட்டவிரோத முயற்சி என கண்டனம் செய்து தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார் .